Home Breaking News News Business Sports Entertainment Health Fashion Film World Technology Videos
Languages
🇮🇳 മലയാളം 🇮🇳 தமிழ்
கூட்டாக வீட்டுக் கடன் வாங்கினால் வரிச் சலுகை இரட்டிப்பாகுமா?
தமிழ்

கூட்டாக வீட்டுக் கடன் வாங்கினால் வரிச் சலுகை இரட்டிப்பாகுமா?

October 14, 2026
1 min read


சென்னை: கூட்டாக வீட்டுக் கடன் வாங்கினால் வரிச் சலுகை இரட்டிப்பாகுமா? என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும்.. பொருளாதார நிபுணர் ராஜேஷ் கிருஷ்ண மூர்த்தி தனது சமூக வலைதளப்பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். வீட்டின் உரிமையாளர்களில் ஒருவராக இருக்க வேண்டும். வீட்டுக் கடனில் இணைக் கடனாளியாக இருக்க வேண்டும்.மாதத் தவணையில் உங்களுக்கான பங்கை உண்மையிலேயே நீங்கள்தான் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.



பொருளாதார நிபுணர் ராஜேஷ் கிருஷ்ண மூர்த்தி வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், "கணவனும் மனைவியும் சேர்ந்து வீடு வாங்குகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். இருவரும் வீட்டுக் கடனில் இருக்கிறார்கள்.



அப்படியானால்... கணவருக்கு ₹2 லட்சம் வட்டிக் கழிவு, மனைவிக்கும் ₹2 லட்சம். அசல் தொகையைத் திருப்பிச் செலுத்துவதற்கு இருவருக்கும் தலா ₹1.5 லட்சம் வரை - அதாவது இருவருக்கும் சேர்த்து ₹7 லட்சம் வரிக் கழிவு கிடைக்குமா? கிடைக்கலாம். ஆனால் கூட்டாகக் கடன் வாங்கினாலே தானாகவே அது கிடைத்துவிடாது. இதுதான் முக்கியமான செய்தி. முதலில் மூன்று விஷயங்கள் சரியாக இருக்க வேண்டும். வீட்டின் உரிமையாளர்களில் ஒருவராக இருக்க வேண்டும். வீட்டுக் கடனில் இணைக் கடனாளியாக இருக்க வேண்டும். மாதத் தவணையில் உங்களுக்கான பங்கை உண்மையிலேயே நீங்கள்தான் செலுத்த வேண்டும். பெயரை மட்டும் கடனில் சேர்த்துவிட்டால் வரிச் சலுகை இரட்டிப்பாகாது. வருமான வரி விதிகளின்படி, இணை உரிமையாளர்களுக்கான வீட்டுச் சொத்து வருமானமும் தகுதியுள்ள வட்டிக் கழிவும் அவரவர் உரிமைப் பங்கு மற்றும் திருப்பிச் செலுத்தும் பங்களிப்பின் அடிப்படையில்தான் கணக்கிடப்படும்.