Home Breaking News News Business Sports Entertainment Health Fashion Film World Technology Videos
Languages
🇮🇳 മലയാളം 🇮🇳 தமிழ்
விஜய் வாயை திறந்தாலே.. கூவம் சாக்கடை ! இன்னும் பஞ்ச் டயலாக் எதற்கு? அட்டாக் மோடில் ஆர்பி உதயகுமார்!
தமிழ்

விஜய் வாயை திறந்தாலே.. கூவம் சாக்கடை ! இன்னும் பஞ்ச் டயலாக் எதற்கு? அட்டாக் மோடில் ஆர்பி உதயகுமார்!

July 11, 2026
0 min read

சென்னை: சினிமா கதாநாயகன் போல வசீகர வசனமும், பஞ்ச் டயலாக்கும் பேசுகிறேன் என்று விஜய் வாயை திறந்தாலே கூவம் ஆற்றில வரும் சாக்கடை தான் வெளியே வருகிறது எனவும், அண்ணா தொடங்கிய இயக்கத்தை, எம்ஜிஆர் தொடங்கிய இயக்கத்தை கூட்டு களவாணிகள் என காட்டுக் கூச்சலிட்டுபேசுவது ஜென்சி தலைமுறையை தவறாக வழி நடத்தி வருகிறார் விஜய் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசியுள்ள அவர்," கரூரில் மக்கள் சந்திப்பில் நிகழ்ச்சியில் விஜய பேசிய பேச்சு ஆணவத்தின் உச்சமாகத்தான் இருக்கிறது. விஜய் இன்னமும் தன்னை ஒரு நடிகராக அடையாளப்படுத்திக் கொள்ளவே விரும்புகிறாரோ என்னவோ?


தமிழ் நாட்டின் கண்ணியமிக்க முதலமைச்சர் பதவிக்கு தன்னை தகுதிப்படுத்திக்கொள்ள அவர் இன்னும் அக்கறை செலுத்தவில்லை. கவனம் செலுத்தவில்லை என்பதுதான் விஜய்யின் ஆணவ பேச்சாக உள்ளது. சினிமா கதாநாயகன் போல வசீகர வசனமும், பஞ்ச் டயலாக்கும் பேசுகிறேன் என்று விஜய் வாயை திறந்தாலே கூவம் ஆற்றில வரும் சாக்கடை தான் வெளியே வருகிறது.

பேரறிஞர் அண்ணா கொட்டும் மழையில் ராபின்சன் பூங்காவில் தொடங்கிய 75 ஆண்டுகள் பவளவிழா காணும் திராவிட முன்னேற்றக் கழகத்தையும், உலகத்திலே ஏழை எளிய சாமானிய மக்களுக்காக புரட்சித் தலைவர் எம்ஜிஆர் தொடங்கிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும் நாகூசாமல் கோடிக்கணக்கான தொண்டர்களின் மனம் புண்படுகின்ற வகையிலே அதிமுகவும் ,திமுகவும் கூட்டு களவாணிகள் என்று ஒரு களவாணி சொன்னால் எப்படி இந்த நாடு ஏற்றுக்கொள்ளுமா?

இதை சொல்வதற்கு முன்பு முதல்வர் விஜய் நீங்கள் என்ன இந்த நாட்டிற்கு தியாகம் செய்தீர்கள்‌ சமூகநீதிக்காக போராடினீர்களா? பெண் உரிமைக்காக தன்னுடைய இளமை பருவத்தை நீங்கள் தியாகம் செய்தீர்களா? மக்களுடைய கல்வி உரிமைக்காக, ஜீவாதார உரிமைக்காக இளமை பருவத்தை தியாகம் செய்து அர்ப்பணித்து இன்றைக்கு மன வலியோடு ,வேதனையோடு அமர்ந்து உள்ளீர்களா விஜய்? ஒரு இயக்கத்தை நீங்கள் எப்படி கொச்சைப்படுத்தலாம், கேவலப்படுத்தலாம்.

புரட்சித்தலைவர் உருவாக்கப்பட்ட இந்த இயக்கம் சமூக நீதிக்காக போராடியும், 69 இட ஒதுக்கீடுக்காக போராடிய இயக்கத்தை,0சத்துணவு தந்த இயக்கத்தை கேவலப்படுத்தலாமா? இதுபோன்று பேசுவதற்கு உங்களுக்கு ஒரு நிமிடம் யோசிக்க வேண்டாமா? நாம் கண்ணியமிக்க முதலமைச்சர் வழியில் அமர்ந்திருக்கிறோம், எட்டு கோடி தமிழர்களுக்கும் வழிகாட்டியாக இருக்கும் முதலமைச்சர் அரியணையில் அமர்ந்துள்ளோம் என்று நினைக்க வேண்டும்.