Home Breaking News News Business Sports Entertainment Health Fashion Film World Technology Videos
Languages
🇮🇳 മലയാളം 🇮🇳 தமிழ்
நந்தம்பாக்கம், வடபழனி ரூட்டில் சூப்பர் சர்ப்ரைஸ்.. சென்னை டிராபிக்குக்கு மார்ச் 2027-ல் தீர்வு ?
தமிழ்

நந்தம்பாக்கம், வடபழனி ரூட்டில் சூப்பர் சர்ப்ரைஸ்.. சென்னை டிராபிக்குக்கு மார்ச் 2027-ல் தீர்வு ?

October 14, 2026
0 min read

சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்வோருக்கு சூப்பரான வசதி வரப்போகிறது.. நந்தம்பாக்கம் முதல் ஆலந்தூர், வடபழனி முதல் பனகல் பார்க் வரையிலான வழித்தடப் பணிகளை 2027 மார்ச் மாதத்துக்குள் முடிக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் டார்கெட் நிர்ணயித்துள்ளது.. ஏற்கனவே கோயம்பேடு முதல் நந்தம்பாக்கம் வரையிலான வழித்தடத்தில் 70 சதவீத பணிகள் முடிந்துள்ள நிலையில், இந்த விரிவாக்கம் எந்தெந்த பகுதிகளுக்குப் பயனளிக்கும் தெரியுமா?






சென்னையில் டிராபிக்கில் சிக்காமல், ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு வேகமாக செல்ல மெட்ரோ ரயில் சேவை நிறைய பேருக்கு உதவியாக இருக்கிறது.. இதனால், ஏற்கனவே பயன்பாட்டிலுள்ள வழித்தடங்களுடன் புதிய பகுதிகளையும் இணைக்கும் வகையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.


இதில் சமீபத்தில் பயணிகளின் கவனத்தை ஈர்த்திருப்பது பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் வடபழனி வரையிலான மெட்ரோ ரயில் சேவைதான்.. இந்த வழித்தடத்தை கடந்த 11ம் தேதி பிரதமர் மோடி மக்கள் பயன்பாட்டுக்காகத் தொடங்கி வைத்தார். மஞ்சள் வழித்தடம் என்று அழைக்கப்படும் இந்தப் பாதையில் மொத்தம் 11 ரயில் நிலையங்கள் உள்ளன. இந்த வழித்தடம் தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே 25,474 பேர் பயணம் செய்திருக்கிறார்கள்.. அதாவது, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில், இத்தனை பேர் பயணம் செய்திருப்பது கவனிக்கத்தக்கது.


இதனிடையே, மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான மெட்ரோ ரயில் பாதையின் கட்டுமானப் பணிகளும் ஜரூராக நடைபெற்று வருகின்றன.. மொத்தம் 47 கி.மீ. தூரம் கொண்ட இந்த வழித்தடத்தில் 46 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.