திண்டுக்கல் அருகே மனைவி மாயமாகி விட்டதாக கணவன் சொன்ன நிலையில் அவரை கொலை செய்து உடலை புதைத்ததாக அதிர்ச்சி தரும் தகவலை கூறி இருக்கிறார். உடலை புதைத்த இடத்தில் தற்போது நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், வருவாய் துறையினரும் காவல் துறையினரும் இணைந்து உடலை தேடி வருகின்றனர். இரண்டாவது நாளாக உடலை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல் அருகே உள்ள இரண்டெல்லப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் லாரன்ஸ். வயது 36 கூலி தொழிலாளியான இவருக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி கௌசல்யா என்ற மனைவியும், 5 மற்றும் 2 வயது பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு கௌசல்யா மாயமானதாக சொல்லப்படுகிறது. கௌசல்யா அடிக்கடி குட்டத்துபட்டியில் உள்ள தனது பெற்றோரிடம் அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வருவது வழக்கம்.
ஆனால் சில வாரங்களாக தனது மகளிடமிருந்து தொலைபேசி தொடர்பு எதுவும் வராத நிலையில் சந்தேகம் அடைந்த அவர்களது பெற்றோர்கள் அவர்கள் வசித்து வரும் இரண்டெல்லபாறை வீட்டில் வந்து பார்த்து உள்ளனர். வீட்டில் கவுசல்யா இல்லாத நிலையில் அவரது பெற்றோர்கள் தனது மகளை காணவில்லை எனவும், தனது மருமகனான லாரன்ஸ் மீது சந்தேகம் ஏற்படுவதாக கூறி திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரை பெற்றுக் கொண்ட தாலுகா போலீசார் லாரன்ஸ் அனைத்து விசாரணை செய்த போது சிறுமலை அடிவாரப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் ரிங் ரோடு பகுதியில் தனது மனைவியை கொன்று சாக்குப்பையில் தைத்து புதைத்ததாக கூறியுள்ளார். அதன் அடிப்படையில் தாலுகா போலீசார் மற்றும் வருவாய் துறையினர் அவர் கூறிய இடத்தில் ஜேசிபி இயந்திரம் மூலம் தேடுதல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.